Posts

Showing posts from May, 2021

தெளிதல்

Image
அவர்கள் கவனிக்கிறார்கள் சிறிய அதிர்வை பெருவெளிக்குள்ளான  இடப்பெயர்வை இருப்பை அக மாற்றத்தின் உன்னத நிலையை யாரும் விரும்புவதுபோல் இல்லை கூனியபடி ஊர் சுத்தின கால்கள் மறைந்து மறைந்து தப்பிவிட்டது நான் கவனிக்கிறேன் இப்போது மாற்றம் சுருண்டு  வண்டின் ரீங்கரிப்போடு பறக்கிறது அதோ அதைப் பிடித்துவிட்டேன் கொன்றும்விட்டேன் - தமிழ்மணி